அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொஹாவி பாலைவன பகுதியில், ரிட்ஜ்கிரஸ்ட் நகருக்கு அருகே இன்று காலை 10.30 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில், ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்துள்ளனர். பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதே பகுதியில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி, ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகிய வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு 20 ஆண்டுகளில் தற்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.