tamilnadu

img

தெற்கு கலிபோர்னியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் மீண்டும் மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகி உள்ளது.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே நேற்று இரவு மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 5 முதல் 3 ரிக்டர் அளவில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடங்கள் சேதமடைந்ததால் ரிட்ஜ்கிரெஸ்ட் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இதுவரை உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், நேற்று மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.