tamilnadu

img

ஏற்காடு ஏரியில் தடுப்பு வலை அகற்றம் ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்கள் வெளியேறியதாக புகார்

ஏற்காடு, ஜூலை 31- ஏற்காடு ஏரியில் உள்ள மீன்கள் வெளியேறுவதை  தடுக்க அமைத்த வலையினை ஊராட்சி நிர்வாகத்தி னர் அகற்றியதால், ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்கள் வெளியேறியதாக மீன்வளத்துறையினர் தெரி வித்தனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு படகு இல்ல ஏரியில்  மீன்வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் விட்டு, அவை வளர்க்கப்பட்டு பிடித்து விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் 26 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு  மீன்கள் வளர்க்கப் பட்டு வந்தது.

மேலும், ஏற்காடு ஏரியில் தண்ணீர் நிரம்பினால் நீர் வெளியேறும் பாதையில், மீன்கள் வெளியேறாமல் இருக்க மீன்வளத்துறை சார்பில் வலை அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த மீன் கள் பிடிக்கப்படும் காலம் ஆகும். இந்நிலையில், வலை இருப்பதால் ஏரியில் இருந்து ஆகாயத் தாமரைகள் மற்றும் குப்பைகள் வெளியே செல்லாமல் தேங்கியதாகவும்,  இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட தாகவும் கூறி, ஊராட்சி நிர்வாகத்தினர், மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் வியாழ னன்று அந்த வலையினை அகற்றினர்.

இது குறித்து தகவல் கிடைத்து வந்த மீன்வளத்துறையினர், மேற் கொண்டு மீன்கள் ஏரியில் இருந்து வெளியேறாமல் தடுக்க மீண்டும் அப்பகுதியில் வலையினை அமைத்தனர். இருப்பினும், ரூ.5 லட்சம் மதிப்பி லான மீன்கள் வெளியேறியிருக்க கூடும் என மீன்வளத்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.