உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரரான நர்சிங் யாதவ் 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு மும்பை காவல்துறையில் ஆயுதப்படை உதவி ஆணையர் பதவி வழங்கப்பட்டது. மும்பை வடமேற்கு நாடாளுமன்ற வேட்பாளர் (காங்கிரஸ்) சஞ்சய் நிருபம் மக்கள வைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நர்சிங் யாதவ் அந்த பிரச்சார மேடையிலிருந்துள்ளார்.உயர்ந்த பதவியில் இருக்கும் நர்சிங் யாதவ் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி வேட்பாளருடன் பிரச்சார மேடையில் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக நர்சிங் யாதவ் மீது அம்போலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகப் புகாரில் சிக்கிய நர்சிங் யாதவ் ஆயுதப்படை உதவி ஆணையர் பதவியிலிருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.