tamilnadu

img

ஆசிய மல்யுத்த போட்டியின் இறுதிக்குள் நுழைந்தனர் இந்தியாவின் பஜ்ரங் புனியா, பிரவீன் ரானா

ஆசிய மல்யுத்த போட்டியின் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டிக்குள் இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் பிரவீன் ரானா ஆகியோர் நுழைந்தனர்.


சீனாவின் ஜியான் நகரத்தில் இந்தாண்டின் ஆசிய மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இன்று நடந்த 65கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில் உஸ்பேகிஸ்தான் நாட்டு மல்யுத்த வீரர் சிரோஜிதினை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.


பிரவீன் ரானா 79கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ரானா கஜகஸ்தான் நாட்டு வீரர் கல்யம்சானை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். பிரவீன் ரானா ஈரான் நாட்டு மல்யுத்த வீரர் பாமன் முகமது தேமௌரியை தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார்.