உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் தாக்கம் அதனால் ஏற்படும் பொருளாதார பின்னடைவு ஒரு பக்கம் இருந்தாலும் உணவு தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சனையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பேரங்காடிகள்முதல் சிறு அங்காடிகள் வரை மக்கள் பதற்றத்துடன் உணவு பொருட்களை வாங்கிக் குவிப்பதால் பல நாடுகளில் இத்தகைய சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, கஜகஸ்தான்,உக்ரைன் ஆகிய நாடுகள் கோதுமை பொருட் களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆசிய நாடுகள் தங்கள் குடி மக்களுக்கு போதிய அளவுக்கு அரிசி உணவை வழங்கமுடியுமா என்கிற கவலை எழுந்துள்ளது. சீனாவும்,இந்தியாவும் உலக அளவில்மிக அதிகமான அரிசி உற்பத்தி செய்யும்நாடுகள். உலகின் மூன்றாவது பெரிய உணவுதானிய ஏற்றுமதி நாடான வியட்நாம் தற்காலிகமாக ஏற்றுமதியை நிறுத்திவைத்துள்ளது. உள்நாட்டில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உள்நாட்டு பற்றாக்குறையை தவிர்க்கமியான்மர் உணவுப்பொருள் தானிய ஏற்றுமதியை குறைத்திருக்கிறது. இவ் வாறு இந்த நாடுகள் அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றன. இதை ஐ.நா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்துகின்றனர். அதேபோல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் பலமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. பிலிப்பைன்சில் மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கூடுதல் நிதிஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று லட்சம்டன் அரிசியை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது.
140 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் இவ்வாண்டு அதிக அளவிலான அரிசியை விவசாயிகளிடமிருந்து வாங்கி சேமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன. இந்நிலையில் உண்மையில் அரிசிக்குதட்டுபாடு இல்லை என்று சில தகவல் களும் உள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியாவின் சேமிப்பு கிடங்குகளில் அரிசியும், கோதுமையும் குவிந்து கிடக்கின்றன.இதன் அளவு 7.5 கோடி டன் ஆகும்.இன்னொருபுறம், வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் பருப்பு உள் ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னணியில் இதுஇன்னும் கடுமையாக உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ஊடக தகவல்கள் சொல்கின்றன.
2019-2020 ஆம் ஆண்டில் உலகில் சாதனை அளவாக 50 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.18 கோடி டன்னுக்கும் அதிகமான அரிசி உலக அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் விவசாயத் துறைதெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, தாய்லாந்திலும் போதுமான அளவிற்கு அரிசி, பருப்பு உள்ளதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி தெரிவிக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 1,508 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 15 லட்சத்து 78 ஆயிரத்து 924 மெட்ரிக் டன் அளவிலும் இதில் டெல்டாமாவட்டங்கள் அல்லாமல் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4 லட்சத்து 78 ஆயிரத்து 550 மெட்ரிக்டன் அளவிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏழு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இது இதுவரை இல்லாத அளவிற்கான கொள்முதல் என்பது குறிப்பிடத்தக் கது. இந்த ஆண்டு (2020)நெல் பயிரிட்டு உள்ளவர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது ஓரளவு ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது என்பது உண்மைதான். இன்னொருபுறம் பழங்கள், காய்கறிகள் பயிரிடப்பட்டு அவர்கள் பேரிழப்பை சந்தித்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 32 ஆயிரத்து 400 ஹெக்டேர் நிலப்பரப்பில் மலர் விவசாயம் நடைபெறுகிறது. இதில் 1.5 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்தஒரு மாதத்தில் மட்டும் மலர் விவசாயத்தில் ஈடுபட்டவர்களின் இழப்பு ரூபாய்648 கோடிக்கும் அதிகம் என்று சொல் லப்படுகிறது. இவர்களுக்கெல்லாம் ஆறுதல் என்னவாக இருக்க முடியும்? வழக்கத்தை விட அதிகமான மகசூல்கிடைத்தும் மகிழ்ச்சியடைய முடியாத நிலையில் இருக்கும் இந்திய விவசாயிகளின் துயரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. அடுத்த பயிரிடலுக்கு அவர்கள்தயாராக வேண்டும்.அதற்கு அவர்களிடம் மூலதனம் இல்லை. இதற்கெல்லாம் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகிறது? அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி என்ன?
=== ஐ.வி.நாகராஜன்====