tamilnadu

ரோசல்பட்டியில் 40 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்... புதிய திட்டம் தொடங்க வலியுறுத்தல்

விருதுநகர்:
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் 40 முதல் 50 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கும்நிலை உள்ளது. எனவே, புதிய திட்டங்கள்மூலம் குடிநீர் சீராக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டுமென அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ருதுநகர் அருகே உள்ளது ரோசல் பட்டி ஊராட்சி. இங்கு பாண்டியன் நகர், முத்தால்நகர், காந்தி நகர், அண்ணா நகர், ஜக்கம்மாள் புரம், மல்லாங்கிணறு சாலை,ஜக்கதேவி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்வசித்து வருகின்றனர்.இப்பகுதிக்கு மத்திய சேனை பகுதியில் இருந்து வரும் புழக்கத்திற்கான தண்ணீர் மட்டும் 30 நாட்களுக்கு ஒருமுறை பகுதிவாரியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம்கடந்த மார்ச் மாதம் முதல் கிடைக்கும் எனஅறிவிக்கப்பட்டது. நாளொன்றுக்கு நான்குலட்சம் லிட்டர் வீதம் 120 லிட்டர் மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தினசரி ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர்கூட கிடைப்பதில்லை.இதையடுத்து அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் புகார்மனு அளித்தனர். மனுவில், “ரோசல்பட்டி ஊராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். குழாய்களில் ஏற்படும்உடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். நீர் ஆதாரமுள்ள பகுதிதியில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். கோரிக்கை மனுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புஷ்பராஜ், கண்ணன், காளிதாஸ் உள்ளிட்டோர் வழங்கினர்.