tamilnadu

img

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரே கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா...

விருதுநகர் 
தமிழகத்தின் 2-வது பெரிய நகரான மதுரைக்கு அருகே உள்ள மாவட்டமான விருதுநகரில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஒருவார காலமாக தினசரி பாதிப்பில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மதுரையை காட்டிலும் விருதுநகர் டாப் ஆர்டரில் உள்ளது. காரணம் அங்குள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சக தொழிற்சாலைகளில் மக்கள் கூட்டமாக, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது தான். குறிப்பாக அல்லம்பட்டி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் பகுதிகள் அதிகளவில் கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளன. 

இந்நிலையில், சிவகாசிக்கு அருகே உள்ள டி. கான்சாபுரம்  கிராமத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (செவ்வாய்) மேலும் 28 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு  மொத்த பாதிப்பு 51 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  வைரஸ் பெரும்பாலும் மக்கள் நெருக்கம் உள்ள நகரத்தில் தான் அதிகளவில் பரவுகிறது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கிராமத்தில் பரவுவது சற்று அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.