tamilnadu

விருதுநகரில்  143 பேருக்கு கொரோனா

விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் உள் ளிட்ட 143 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் ஆணைக்குழாய் தெரு, அஹமது நகர், அம்பேத்கர் தெரு, அல் லம்பட்டி, பள்ளிவாசல் தெரு, பாலவநத்தம், சின்னவள்ளிக்குளம், சின்னதாதம்பட்டி, பெரியபேராலி, எரிச்சநத்தம், நடுவப் பட்டி, வச்சக்காரப்பட்டி, மேலசின்னையா புரம், சேடபட்டி, குமாரலிங்கபுரம், கோட்ட நத்தம், பெரியவாடியூர், காரியபாட்டி, கல் குறிச்சி, சாத்தூர் ஆண்டாள்புரம், ஆமத் தூர், அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகர், ராமசாமிபுரம், ராஜீவ் நகர், ஆத்திபட்டி, பெரியபுளியம்பட்டி, சொக்கலிங்கபுரம், அம்பலம்சுப்பன் தெரு, தனியார் கல்லூரி விடுதி, போடுரெட்டியபட்டி, பாலையம் பட்டி, செட்டிக்குறிச்சி, சுக்கிலநத்தம், பூலாங் கல், கல்லூரணி, சவ்வாசுபுரம், சித்தல குண்டு, அ.முக்குளம், சூலக்கரை, நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் ஆகி யோருக்கு தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகள், தனியார் கல்லூரி களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.