புதுதில்லி, நவ.3- கடந்த செப்டம்பரில் இந்தியா வைச் சேர்ந்த 121 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்திய பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட வர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக சில தினங்க ளுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் வெளி யானது. இஸ்ரேலை சேர்ந்த ஒரு தனி யார் மென்பொருள் நிறுவனம் தயா ரித்த பெகாசுஸ் என்ற மென்பொருள் இதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அந்த 24 பேருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட தாக கூறப்பட்டது. இந்த தகவல் வெளி யானவுடன், வாட்ஸ் அப் நிறுவனத்தி டம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரித்திருந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்ப ரில் இந்தியாவை சேர்ந்த 121 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக தற்போது தக வல் வெளியாகியுள்ளது .
அவர்கள் அனைவருக்கும் இது குறித்து வாட்ஸ் அப் சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தக வல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவு மென் பொருளுக்கு எதி ராக சட்டமியற்ற வேண்டும் என்றும் உளவுபார்த்தது குறித்து விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலி யுறுத்தியுள்ளன.