tamilnadu

காரியாபட்டியைச் சேர்ந்தவருக்கு வைரஸ் தொற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர், மார்ச் 21- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீ.நாங்கூர் ஊராட்சிக்குட்பட்டது கூரானேந்தல் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த  பெரியசாமி மகன் அக்னிராஜ், இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கேரளாவில்  உள்ள உணவகத்தில்  மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கு மார்ச் 5- ஆம்தேதி திருமணம் நடந்துள்ளது. தற்போது காரியா பட்டி பெரியார் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் வந்துள்ளது,  காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது, காய்ச்சல் மூச்சுதிணறல், தலைவலி  இருந்துள்ளது கண்டறியப்பட்டது.  இதையடுத்து,  அவருக்கு கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்.   மதுரை அரசு மருத்துவமனைக்கு அக்னி ராஜை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சுகாதாரத்துறை அலுவலர்கள்.ஊழியர்கள் அக்கிராஜின் வீடு மற்றும் அப்பகுதி யைச் சுற்றி கிருமி நாசினிகளை தெளித்தனர். அப்போது காரியாபட்டி காவல் ஆய்வாளர் செல்வராஜ்,  செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.