விழுப்புரம், ஆக.17- அரசு விதிகளை மீறி ஏரியில் மண் எடுக்கும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் என்.சுப்பரமணியன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட சாலை கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் ஏரி உள்ளது, அந்த ஏரியில் பைபாஸ் சாலை அமைக்கும் பணிக்கு தனியார் நிறுவ னத்திற்கு அரசு விதிகளின்படி 1 மீ.ஆழம், 20 அடி அகலம்,100 மீ.நீளம் என்ற கணக்கில் ஏரியை சுற்றி ஆக்ரிமிப்பு பகுதியில் மண் எடுத்து பயன்படுத்தி கொள்ள மாவட்ட கனிம வளத்துறை ஆணை வழங்கி உள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த நிறுவனம் அரசு விதி களை மீறி 20 அடி ஆழம்,100 மீ.அகலம், 200, 300 மீ. நீளம் என பெரிய பெரிய பள்ளங்களை தோண்டி மண் எடுத்து வருகிறது.
இந்த பள் ளங்கள் தண்ணீர் வெளியேறும் மதகுகளை விட ஆழமாக இருப்பதால் மழைக் காலங்க ளில் வரும் மழைநீர் இந்த பள்ளங்களில் தேங்கி, விவசாயத்திற்கு பயன்படாமல் போய்விடும். இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த தனியார் நிறுவனம் காவல்துறை துணையோடு தொடர்ந்து மண் அள்ளி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப் பட்ட துறைகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏரியில் அரசு விதிகளை மீறி ஆழ மாக பள்ளம் தோண்டி மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறேன். இல்லையென்றால் இதனை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.