விழுப்புரம்.ஏப்.19- விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, அதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்,உளுந்தூர்பேட்டை, திருக் கோவிலூர், திண்டிவனம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்களை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வாக்கு என்னும் இடத்தில் வைக்கப் பட்டுள்ளது, இந்த மையத்தை வெள்ளிக் கிழமை(ஏப்.19) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இல.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.பின்னர் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை பூட்டி முத்திரையிட்டு சீல் வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கோட்டாட்சியர் குமரவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர், மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது, சீல் வைக்கப் பட்டு இருக்கும் அறை 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்புக் கேமராவினால் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.