தரங்கம்பாடி, நவ.8- நாகை மாவட்டம், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வியாழனன்று நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக பொறையார் பணிமனையி லிருந்து வந்திருந்த விழிப்புணர்வு பேருந்தில் அமைக்கப் பட்டிருந்த பாதுகாப்பு, விழிப்புணர்வு, சாலை விதிகள் குறித்த கண்காட்சியை பொறையார் அரசு போக்குவரத்து கழக அதிகாரி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களிடம் விரி வாக விளக்கி உரையாற்றினர். மாணவர்களை கவரும் வகையில் பிரத்யேகமாக பேருந்தினுள் வடிவமைக்கப்பட்டி ருந்ததால் மாணவர்கள் ஆர்வமுடன் ரசித்து கற்று கொண்டனர்.