விழுப்புரம், மார்ச் 3- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத் திற்குட்பட்ட வசந்த கிருஷ்ணாபுரம் கிராம மக்கள்நூறு நாள் வேலை கேட்டு கடந்த சில மாதங்க ளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். சம்பந்தப்பட்ட அரசு அதி காரிகள் மெத்தனமாக இது வரை வேலை வழங்க வில்லை. இதனை கண்டித் தும், உடனடியாக நூறு நாள்வேலை வழங்க வலி யுறுத்தியும் வசந்த கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கஞ்சித் தொட்டி போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு விதொச மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்த லிங்கம், மாவட்டத் தலை வர் வி.அர்ச்சுணன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தர மூர்த்தி, கரும்பு விவசாயி கள் சங்க மாநில துணைச் செயலாளர் சு.வேல்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் சிபிஎம் வட்டச் செயலாளர் எம்.முத்துவேல், மாதர் சங்க வி. உமாமகேஸ்வரி, வட்டப் பொருளாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.