திருவண்ணாமலை, ஜூன் 28- திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பொது முடக்கத்தால் வாழ் வாதாரத்தை இழந்து வறு மையில் வாடும் நெசவாளர்க ளின் பசியைப் போக்க கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. திருவண்ணாமலை சேத் துப்பட்டு அருகே உள்ளது தேவிகாபுரம் தேர்வு நிலை பேரூராட்சி. இங்கு 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பட்டு நெசவு இன்றும் இவ்வூ ரின் முக்கியத் தொழிலாக வும், அந்த மக்களின் வாழ்வா தாரமாகவும் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் னர் இந்த ஊரில் நூல் சேலை கள், காடா துணிகள், லுங்கி கள் போன்றவை நெய்து அவற்றை நெய்தவர்களே பல ஊர்களுக்குச் சென்று விற்பனை செய்து வந்தனர்.
இதில் வருமானம் குறை வாகவும் உழைப்பு அதிக மாகவும் இருந்ததால் பின்னர் அனைவருமே பட்டு நெசவுக்கு மாறிவிட்டனர். கொரானா பொது முடக் கத்தால், நேரடியாக நெசவுத் தொழிலையும், அதைச் சார்ந்துள்ளவர்களும் படிப் படியாக தங்கள் வாழ்வா தாரத்தை இழந்து வருகின்ற னர். இந்நிலையில், ஞாயி றன்று (ஜூன் 28) சிலரின் உதவியுடன் நெசவாளர்கள் பசி போக்க கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், நெசவாளர்களுக்கு கொரேனா கால நிவாரணம் வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்ததது. ஆனால் இது வரை வழங்கவில்லை. கையி லிருந்த சிறு நகைகளையும் விற்றுக் கடந்த 4 மாதங்களாக வாழ்ந்து வருகிறோம். தற் போது உணவிற்கே வழி யில்லாமல் எங்கள் குடும் பங்கள் பரிதவித்து வருகின் றன. உடனடியாக அரசு நெச வாளர்கள் வாழ்வாதாரத் தைக் காக்க, உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.