விழுப்புரம், மே 15-நூறு நாள் வேலை வழங்காததை கண் டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட் டம், காணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வேலை வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி,அரியலூர் திருக்கை ஆர்.சவுந்தரராஜன், அந்தியூர் திருக்கை பழனிவேல்,வீரமூர் ராஜேந்திரன்,கெடார் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட மூங்கில்பட்டு, உலகலாம்பூண்டி,கொட்டியாம்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். ஆனால், காணை வட்டார வளர்ச்சி அலுவகத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மட்டும் வேலை வழங்காமல் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மறுத்து வருகின்றனர். வேலை கேட்டு மாற்றுத் திறனாளிகள் கொடுக்கும் மனுவை வாங்க அதிகாரிகள் அலட்சியம் காட்டி மறுத்து வருகின்றனர். உடனடியாக அரசாணை 52 ல் குறிப் பிட்டுள்ளது போல் 4 மணி நேர வேலை, முழு கூலியான ரூ.224 ஐ வழங்க வேண்டும், வேலை வழங்கவில்லை என்றால் முழு கூலியில் பாதியை மாற்றுத்திறனாளி களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.