tamilnadu

img

அபாயத்தை ஏற்படுத்த காத்திருக்கும் புது ஆறு பாலம்

தஞ்சாவூர், செப்.25- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திரு வோணம் அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை ஊரா ட்சியில் உள்ள கல்லணைக் கால்வாய், புது ஆறு பாலம் கடந்த இரண்டு ஆண்டு களாக இடிந்து அபாய நிலை யில் உள்ளது. இதனை உட னடியாக சீரமைத்து தர வேண் டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் ஊரணிபுரம் கிளை கேட்டுக் கொண்டுள் ளது.  இதுகுறித்து தமுஎகச கிளைத் தலைவர் வெட்டு வாக்கோட்டை பாரதிராஜா கூறுகையில், வெட்டுவாக் கோட்டை புது ஆற்றில் உள்ள பாலம் இடிந்து இரண்டு வரு டங்களுக்கு மேல் ஆகிறது. இதுகுறித்து அரசின் கவ னத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும் இதுவரை உரிய நட வடிக்கை எடுக்கப்பட வில்லை. அதிகாரிகள் பல முறை பாலத்தை அளவிடு வதும் கணக்கிடுவதுமாகவே உள்ளனர். ஆனால் பணி களை தொடங்குவதாக தெரியவில்லை.  தற்போது ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. விவசாய நிலங்களுக்கு, பள்ளி, கல் லுரிகளுக்கு செல்லும் வாக னங்கள் இப்பாலத்தின் வழி யாகத்தான் செல்ல வேண் டிய சூழல். ஆனால் தற் போது பாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளதால் மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.  தற்போது அரசின் சார்பில் பாலம் சேதம் அடைந்துள்ள தால் கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்டிப் பாக செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக் கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர், பள்ளி சிறுவர்கள் இவ்வழி யாகவே பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, அசம்பா விதங்கள் ஏதும் நடைபெறும் முன்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பால த்தை புதிதாக அமைத்து தர வேண்டும்” என்றார்.