tamilnadu

கடன் வாங்கிய பெண்களை இழிவாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் ஆட்சியரிடம் பெண்கள் புகார்

 விருதுநகர், மே 20- மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் கடனை திரும்பத் தரக் கோரி பெண்களை பொது இடங்களில் வைத்து கேவலமாகப் பேசுவதாக மாவட்ட ஆட்சியரிடம் சுய உதவிக்குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அம்மனுவில் கூறியதா வது: ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த 150 பெண் கள் சீட்ஸ், எல் அன்ட் டி, சமஸ்தா, கிராம சக்தி, இதயம்-ஜீ, மகாசேமம், கிராம விடி யல், சூரியா உதயம், ஆசீர்வாதம், எக்விடாஸ், வயா, கிராமின் கூட்டா, எஸ்.பேங்க் பின் கார்ப் உள்ளிட்ட நுண் நிதி நிறு வனங்களில் கடன் பெற்றுள்ளோம். வாரம் தோறும் சரியாக வாங்கிய கடனை வட்டி யுடன் திரும்பச் செலுத்தி வந்தோம்.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளோம். இந்தநிலையில், நுண் நிதி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் எங்க ளது வீட்டிற்கு வந்து அனைவரும் உடனடி யாக கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என தொடர்ந்து தொந்தரவு செய்கின்றனர். எங்களை பெண்கள் என்றும் பார்க்கா மல் கேவலமான வார்த்தைகளால் பொது இடத்தில் வைத்து பேசுகின்றனர். இத னால், மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி யுள்ளோம். வேலை தொடங்கியதும் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த தயாரா கவே உள்ளோம். எனவே, அதுவரை அந்நிறு வனங்களிடம் கால அவகாசம் பெற்றுத் தர வேண்டும். மேலும் பெண்களை அநாக ரீகமாகப் பேசியவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அம்மனு வில் தெரிவித்துள்ளனர்.