விருதுநகர், மே 12- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுரு கன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலு வலக்ததில் வழங்கிய மனுவில் கூறிய தாவது: விருதுநகர் மாவட்டத்தில் வத்திரா யிருப்பு, திருவில்லிபுத்தூர், இராஜ பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளை ஈ தாக்குதலால் ஏராளமான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் முத்தரப்பு கூட்டத் தில் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.6.21 கோடியில் 60 சதவீதத்தை மார்ச் 20க்குள் தருவது என உறுதியளித்தது.
ஆனால், தற்போது வரை வழங்கவில்லை. எனவே, உடனடியாக அனைத்து நிலு வைத் தொகையையும் வட்டியுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். தற்போது தேங்காய் விலை வீழ்ச்சி யடைந்துள்ளது. எனவே, தமிழக அரசு கொப்பரை மற்றும் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்து கொள் முதல் செய்திட வேண்டும். ரேசன் கடை களில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வும், இராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டியில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.