சாத்தூர், ஜூன் 7- சாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(52). மேலாகாந்தி நகரைச் சேர்ந்த பாலசுந்தரம் (60). இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டியிலி ருந்து சாத்தூர் நோக்கிச் சென்று கொண்டி ருந்தனர். எதிர்திசையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் (43) என்ப வர் காரில் வந்து கொண்டிருந்தார். தனியார் ஆலை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சந்திரசேகரன், பாலசுந்தரம் ஆகி யோர் உயிரிழந்தனர். சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.