tamilnadu

img

சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாத பாஜக: டி.ராஜா

விழுப்புரம், ஏப்.11- கூட்டணி வேட்பாளர் து.ரவிக்குமாரைஆதரித்து,விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா பேசுகையில், “மோடியின் ஆட்சி தொடர்ந்தால் ஜனநாயகத்தையும்,மதச் சார்பின்மையையும் பாதுக்காக்க முடியாது” என்றார்.விவசாயிகள் தற்கொலை, தொழில்கள் முடக்கம், புதிய வேலை வாய்ப்புகள் இல்லை என்பதுதான் கடந்த 5 ஆண்டுகால பாஜக சாதனை. இந்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க மோடிக்கு துணிவில்லை. ராணுவ வீரர்களின் தியாகத்தைச் சொல்லி, மக்களிடம் பாஜக வாக்கு கேட்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.இந்தியாவைக் காப்பாற்ற, ஜனநாயகத்தை வலுவாக்க மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும். ராமதாஸ் தனது கொள்கையை கைவிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தத் தேர்தல் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் முக்கியமான தேர்தல். பாஜக அணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ரவிக்குமாரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் து. ராஜா கேட்டுக்கொண்டார்.