தஞ்சாவூர், டிச.7- தஞ்சாவூரில் வெள்ளி யன்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு சர்க்கரை கழ கத்தின் சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பேரவைக் கூட்டத் தில், நிலுவைத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சர்க்கரை துறை ஆணையர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், குருங் குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ. 30 கோடி வழங் கப்படாததைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் முழக் கங்கள் எழுப்பியபடி, வெளி நடப்பு செய்தனர். பின்னர், கூட்ட அரங்கின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து கரும்பு விவ சாயிகள் தெரிவித்தது: குருங் குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு அரை வைக்காக 2015-16 மற்றும் 2016 -17 ம் ஆண்டில் அனுப் பப்பட்ட கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலை டன் ஒன்றுக்கு ரூ. 900 வழங்க வேண்டும். ஆனால், ரூ.30 கோடி வரை நிலுவைத் தொகையை ஆலை வைத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை நிலு வைத் தொகை வழங்கப்பட வில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம். ஆலையை குறித்த காலத்தில் திறக்காததால் இழப்பு ஏற்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்க்கரை ஆலை பணியா ளர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை (டிச.8) ஆலையில் அரைவைப் பணி தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி அரைவை தொடங்கப்பட வேண்டும்” என்றனர் விவ சாயிகள்.
தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள், பின்னர் மீண்டும் கூட்டத் தில் பங்கேற்றனர். கூட்டத் தில் விவசாயிகள் பேசுகை யில்,”கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். ஆலை க்கு கரும்புப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு வங்கிக ளில் கடன் பெற்றுத் தர வேண் டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4,000 விலை அறிவிக்க வேண் டும். ஆலையில் ஊழல் செய்தவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை” என்றனர். பின்னர், சர்க்கரை துறை ஆணையர் பேசியது: அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ரூ. 2.40 கோடி ஊழல் செய்த 133 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்போது இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையைத் தொ டர்ந்து கண்காணிப்போம்.
இந்த ஆலையில் முன்பு 6 லட்சம் டன்கள் அரைவை இருந்த நிலையில் இப்போது 2 லட்சம் டன்களாக குறைந்து விட்டது. சில ஆண்டுகளாக அரைவைப் பருவம் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படுகிறது. எட்டு மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய கோ-1105 ரக கரும்பைப் பயிரிட்டால் அக் டோபர் மாதத்தில் அறு வடை செய்து விடலாம். இதன் மூலம், ஆலையில் அரைவைப் பருவத்தை அக்டோபர் மாதத்திலேயே தொடங்க வாய்ப்பாக அமை யும். கரும்புக்கான நிலுவைத் தொகை தொடர்பான கோப்புகள் அரசிடம் தீவிர பரிசீலனையில் உள்ளது. எனவே, விரைவில் விவசாயி களுக்கு நல்ல முடிவு கிடைக் கும் என நம்புகிறேன்” என்றார் ஆணையர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ம.கோவிந்த ராவ் (தஞ்சாவூர்), உமா மகேஸ்வரி (புதுக்கோட் டை), சர்க்கரைத் துறைப் பொது மேலாளர் விஜயா, நிதித் துறை இணை இயக்கு னர் பாலாஜி, தொழில் துறைத் துணை இயக்குனர் சரவணகுமார், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மங்களம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.