tamilnadu

img

கொரோனாவால் திணறும் அமெரிக்கா.... ஒரே நாளில் 1,600 பேர் பலி   

வாஷிங்டன்
தற்போதைய நிலையில் உலகின் கொரோனா மையங்களாக இருப்பவை அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டும் தான். பிரேசில், ரஷ்யா ஆகிய நாட்டில் கொரோனா பரவல் 4 மடங்காக இருக்கும் நிலையில், அமெரிக்கா ஒருபடி மேலே சென்று பயணிக்கிறது. அதாவது அந்நாட்டில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 29 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 11 லட்சத்து 66 ஆயிரத்து 766 ஆக உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 691 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழந்துள்ள நிலையில், மொத்த  பலி  எண்ணிக்கை 67 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை அங்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், நியூயார்க்கில் கொரோனா பலி எண்ணிக்கை சற்று குறைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை அமெரிக்காவில் 1 லட்சத்து 73 ஆயிரம் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.