tamilnadu

img

மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு

தேனி, நவ.9- வைகை அணையிலிருந்து மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட் டங்களில் உள்ள வைகை பூர்வீக பாச னப்பகுதிகளுக்கு சனிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி ஆட்சி யர் ம.பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார்.  பின்னர் அவர்களிடம் கூறிய தாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி தண்ணீர் திறந்து வைத்துள்ளேன்.

மதுரை, இராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீகப் பாசனப்பகுதி III-க்கு 9.11.2019 முதல் 16.11.2019 வரை ஏழு நாட்களுக்கு 1441 மில்லியன் கன அடி, வைகை பூர்வீகப் பாசனப்பகுதி II-க்கு 17.11.2019 முதல் 21.11.2019 வரை நான்கு நாட்க ளுக்கு 386 மில்லியன் கன அடி, 22.11.2019 முதல் 25.11.2019 வரை மூன்று நாட்களுக்கு 48 மில்லியன் கன அடி, பகுதி I-ஐ சார்ந்த நான்கு கண்மாய் களுக்கு விரகனூர் மதகணையில் வழங்கவும், வைகை பூர்வீகபாச னப்பகுதி I-க்கு 26.11.2019 முதல் 2.12.2019 வரை 240 மில்லியன் கனஅடி தண்ணீரை, நீர் இருப்பு, நீர் வரத்தைப் பொறுத்து வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் மதுரை, இராமநாத புரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் நேரடி, மறைமுக பாசன வசதி பெறும். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயிகள் அதிகமகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.