tamilnadu

img

நிர்பயா நிதியின் கீழ் ’ஷீ டாய்லெட்’

சென்னை, நவ. 11-  சென்னையில் பெண்களுக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ‘ஷீ டாய்லெட்’ ((SHE Toilets )) என்ற சிறப்பு கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள எஸ்.பி. வேலுமணி, சென்னை நகரம் முழுவதும் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ், ஹூட்டர் அலாரம் மற்றும் சென்சார் உள்ளிட்ட பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஷீ டாய்லெட் என்ற சிறப்பு கழிப்பறைகள் சென்னை மாநகராட்சியால் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.