வேலூர், ஏப்.7-
வி.ஐ.டி.யில் பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு தின விழா அண்ணா அரங்கில் நடைபெற்றது. துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் வரவேற்று பல்கலைக் கழகத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். துணைத்தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன் முன்னிலை வகித்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கலந்துகொண்டு வி.ஐ.டி.யில் பயிலும் 2,142 மாணவர்களுக்கு ரூ.90 லட்சம் கல்வி உதவித் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட பி.டெக் இறுதியாண்டு மாணவர் வி.சஞ்சய், முதுகலை பொறியியல் மாணவி வி.எஸ்.அமலா காவியா ஆகியோருக்கு வேந்தரின் சிறப்பு விருது வழங்கினார்.அதைத் தொடர்ந்து நீதிபதி டி.ராஜா பேசுகையில், “நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, தொழில்துறையை அடிப்படையாகக் கொண் டுள்ளது. தொழில்துறை உற்பத்தியை சார்ந் தது. உற்பத்திக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. செல்போன் வசதி மூலம் உலகில் உள்ள நிகழ்வு, தகவல் பரிமாற்றங்களை இருந்த இடத்தில் இருந்தே அறிய முடிகிறது. இது புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியாகும். வி.ஐ.டி. பல் கலைக்கழகம் ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டத் தக்கது” என்றார்.விழாவுக்கு வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வுகள் மையத்தின் இயக்குனரும் பேராசிரியருமான இ.நடராஜன் வி.ஐ.டி. நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்தியா பெண்ட்டரெட்டி, இணை துணைவேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர் கே.சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.