புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்
சென்னை,பிப்.12- காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மா னம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் புதனன்று(பிப்.12) ) காலை துவங்கியதும் முன் னாள் உறுப்பினர்கள் ராமநாதன், புருஷோத் தம்மன் ஆகியோரது மறைவு குறித்து பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து இரங்கல் தீர்மா னத்தை கொண்டு வந்தார். உறுப்பினர்கள் அனை வரும் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். இக் கூட்டத்தில், காரைக்கால் மாவட்டம் மற்றும் பாகூர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. காவிரி ஆற்றின் கடைமடை பாசன பகுதி யாக உள்ள காரைக்கால் மாவட்ட விவசா யத்தை மேம்படுத்தவும், நகரமயமாதலால் விவ சாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.