மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஒன்றுபட்ட வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை யூரோ ஷூ கம்பெனியில் டில்லிபாபு, ரவிக்குமார், அருண்குமார் ஆகியோர் தலைமையிலும், கால்சியா ஷூ கம்பெனியில் ராஜசேகர், முனிசாமி தலைமையிலும், சிப்காட் பகுதி 1 மற்றும் 2 ல் கே.குழந்த வேலு, செந்தில்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.