திருச்சிராப்பள்ளி, பிப்.11- ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி ஊராட்சி கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விவசாயிகள் சங்க பொறுப்பாளர் பாலசுப்பிரமணி யன் துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பழநிசாமி கண்டன உரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்குமார், ஹரிபாஸ்கர், கிளைச் செயலாளர் சங்கர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.