districts

img

விவசாயிகளை உறுப்பினராக சேர்க்கவில்லை தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,  மார்ச் 11 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை உறுப்பினராக சேர்க்க விண் ணப்பித்து பல ஆண்டுகளாகி யும் இதுவரை சேர்க்கப்படா மல் உள்ளனர். இதைக் கண்டித்து தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத்தில் கும்பகோணம் துணை மேலாளரிடம் விவசாயிகள் மனு கொடுக்கும் இயக்கமும்  கும்பகோணம் கூட்டுறவு துணை மேலாளர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் என்.கணேசன் தலைமை வகித்தார். தேவனாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாராமன், ஒன்றிய தலை வர் குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநில துணைத் தலை வர் டி.ரவீந்திரன், மாவட்ட  செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலை வர் செந்தில்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி, கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ஜேசு தாஸ், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் டி.ஜி. ராஜேந்திரன், கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில் குமார் மற்றும் தேவனாஞ் சேரி திருநல்லூர் ஊர்உடை யான், நத்தம் மணல்மேடு ஆகிய பகுதிகளிலிந்து விவ சாயிகள் கலந்து கொண்டனர்.  இறுதியில் கும்பகோ ணம் கூட்டுறவு துணை மேலா ளரை சந்தித்து மனு கொடுக் கும்போது அவர், மனு கொடுத்த விவசாயிகள் அனைவரும் தேவ னாஞ்சேரி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத்தில்  விவசாயிகளை உறுப்பின ராக சேர்க்கப்படுவர் என உறுதியளித்தார்.