உத்தரப் பிரதேசத்தில் இரு சக்கர சாதிய சொற்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையான சொற்களை எழுதியிருந்த வாகன ஓட்டிகளுக்கு அம்மாநிலப் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத்தா நகர் முழுவதும், மாவட்டக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த 133 வாகனங்கள், சாதிய கருத்துகள் கொண்ட சொற்களைக் எழுதப்பட்டிருந்தன. இதில் நகர்ப்புறங்களில் 100 மற்றும் கிராமப்புறங்களில் 33 வாகனங்கள் ஆகும். அதே போல், வன்முறையை தூண்டும் வகையான கருத்துகள் தாங்கிய 91 வாகனங்களும் இருந்தன. இதில் 78 நகர்ப்புறத்தைச் சேர்ந்தவை என்றும் 13 கிராமப்புறங்களைச் சேர்ந்தவை என்றும் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், இரு சக்கர சாதிய சொற்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையான சொற்களை எழுதியிருந்த வாகன ஓட்டிகளுக்கு அபராத சலான்கள் வழங்கப்பட்டன. மேலும், நம்பர் பிளேட்டுகளை சேதப்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.