tamilnadu

img

ஜிஎஸ்டி கேட்ட ஐ.டி. அதிகாரிகள்.... ‘டீ கடை’க்காரரை கைகாட்டிய சமோசா கடைக்காரர்...

அலிகார்:
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில், கச்சோரி, சமோசா உணவு வகைகள் முக்கியமானவை. மொறு மொறுப்பான சிறிய பூரியுடன், வெங்காயம்,சில மசாலா பொருள்களை உள்ளடக்கிய கச்சோரி உணவு, புளிப்பு, காரம், இனிப்புஎன அனைத்து சுவைகளின் சேர்மானமாக இருக்கும்.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், முகேஷ் என்பவர் நடத்தும் ‘கச்சோரி கடை’ ருசிக்குப் பெயர்போனது என்று கூறப்படுகிறது. இங்கு விற்கப்படும் கச்சோரி, சமோசா-வுக்காக காலை முதல் இரவு வரை எந்நேரமும் கூட்டம் அலைமோதும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், முகேஷ் வருமான வரி கட்டாமல் ஏமாற்றுகிறார் என்று, தொழில் போட்டி காரணமாக, யாரோ ஒருவர் வருமானவரித் துறைக்கு போட்டுக்கொடுத்துள்ளனர். வருமான வரித்துறையினரும், ஒரு குழுவாகச் சென்று முகேஷ்கடைக்கு எதிரே இருக்கும் மற்றொரு கடையில் நாள் முழுவதும் அமர்ந்து, முகேஷ்கடையின் சமோசா, கச்சோரி வியாபாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்துள்ளனர். 

அப்போது, முகேஷ் கடையில் நடக்கும்விற்பனையைப் பார்த்தால், எப்படியும் அவர் ஆண்டுக்கு 60 லட்சம் முதல் 1 கோடிவரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாக, அங்கிருந்தவாறே கணக்குப் போட்ட அதி
காரிகள், அதனடிப்படையில், கடந்த ஓராண்டுக்கான ஜிஎஸ்டி வரியை கட்டுமாறு, முகேஷூக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். “முகேஷ் தனக்கு வரும் வருமானத்தைக் கணக்குக் காட்ட வேண்டும். அவர் பயன்படுத்தும் பொருட்கள், எண்ணெய், சிலிண்டர் என அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்; தயாரிக்கப்படும் உணவுகளுக்கு 5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்” என்றும் அவர்கள்
கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முகேஷ், “ நான் கடந்த 12 வருடங்களாக இந்தக் கடையை நடத்தி வருகிறேன். நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். சமோசா, கச்சோரியை விற்றுதான் பிழைப்பு நடத்தி
வருகிறோம்; நாளொன்றுக்கு அதிகபட்சம் 3 ஆயிரம் ரூபாய்தான் எங்களின் வரவு- செலவு” என்று கதறியுள்ளார். அப்படியே பார்த்தாலும், “40 லட்சம் ரூபாய் வரை வரவு-செலவு நடத்தும் கடை
உரிமையாளர்கள் ஜி.எஸ்.டி.வரி செலுத்த வேண்டியதில்லை என்று பிரதமர் மோடிகூறியிருக்கிறாரே..” என்று கூறும் முகேஷ்,“அதைக் கணக்கிடும்போது, என்னுடைய வருமானம் அதில் பாதிகூட இருக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஜிஎஸ்டி வரி எங்கே, என்றதற்கு?, சிறுவயதில் டீ விற்றதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியை நோக்கி, சமோசா கடைக்காரர் கைகாட்டியுள்ளார்.