மேற்கு வங்கத்தில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற விரைவு ரயில் தடம்புரண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து புதுதில்லி நோக்கிபூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு ரயில் அடைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 13 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.