tamilnadu

img

உ.பி.யில் 10 லட்சம் பேர் இந்தியில் ‘பெயில்’

லக்னோ:
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், நாடு முழுவதும் இந்தியைத் திணிக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, இந்தி பேசுவோரைக் கொண்ட, உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே, 10 லட்சம் பேர், இந்தி மொழிக்கான வாரியத் தேர்வில் ‘பெயில்’ ஆகியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியானபோது, உத்தரப்பிரதேசத்தில் சுமார் 20 சதவிகித மாணவ - மாணவியர், இந்தி மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அதாவது 10-ஆம் வகுப்பில் 5 லட்சத்து 74 ஆயிரம் மாணவ - மாணவியரும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரம் மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை.தற்போது இந்தி ஜெனரல் தேர்விலும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் தோல்வியடைந்துள்ளனர். இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் நடப்பாண்டில் மட்டும் 9 லட்சத்து 97 ஆயிரத்து 948 பேர் இந்தியில் பெயில் ஆகியுள்ளனர்.