முசாபர்நகர்:
மின்சார நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தாத விவசாயிகள் மீது உத்தரப்பிர தேச பாஜக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.இது விவசாயிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை இன்னும்கொடுக்கவில்லை. இது குறித்து விவசாயிகள் செய்த முறையீட்டிற்கு, ஆதித்யநாத் அரசிடமிருந்து இதுவரை எந்தவித பதிலும் இல்லை. ஆனால், மின் கட்டண நிலுவைஎன்று விவசாயிகள் மீது வழக்கு போடுவதில் மட்டும் இவ்வளவு வேகமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தங்கள் மீதான பாஜக அரசின் வன்மத்தைஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள விவசாயிகள், வழக்கைத் திரும்பப்பெறாவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.