tamilnadu

img

நினைவேந்தல் கூட்டம்

உடுமலை, டிச. 28- தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் உடுமலைப்பேட்டை வட்டக்கிளை தலைவர் எஸ்.கே.தனுஷ் கோடியின் புகழஞ்சலிக்கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது.  தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க அலுவல கத்தில் சங்க மாவட்ட செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் உடுமலைப் பேட்டை வட்டக்கிளை செயலாளர் தா.இ.தாசன், பொருளாளர் பி.எஸ்.சுரேஷ் குமார், துணைத்தலைவர்கள் எஸ்.விஜ யவர்மன், டி.பரிமேலழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இரவிச்சந்திரன், உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தின் நிர்வாகி அருட்செல்வன், பத்திரிக்கையாளர் கணியூர் பரூக், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன், உடுமலைப்பேட்டை வட்டக்கிளைத் தலைவர் டி.வைரமுத்து, ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் ச.செல்லத்துரை, தமிழ் நாடு வருவாய்த்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சோமசுந்தரம் ஆகியோர் அஞ்சலி உரை யாற்றினர். இதில் ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.