tamilnadu

img

பந்தலூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் சங்கத்தினர் உழைப்பு தானம்

உதகை, ஆக. 23 - புதர் மண்டிக் கிடந்த பந்தலூர் அரசு மருத் துவமனை வளாகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூய்மைப்படுத்தினர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா வில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையைச் சுற்றி மண்டி கிடந்த புதரில் பாம்புகள் மறைந்திருந்து அடிக்கடி மருத்துவமனைக் குள் புகுந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல், மாலை நேரத்தில் காட்டுப் பன்றிகளும் வந்து செல்வதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துட னேயே இருந்து வந்த நிலை இருந்தது.  

இந்நிலையில், ஞாயிறன்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் இம்மருத்து வமனை வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில்  ஈடுபட்டனர். இந்நிகழ்விற்கு வாலிபர் சங்கத்தின் நெல்லியாளம் நகரக் கமிட்டி செயலாளர் ஜூனேஷ், ஜெம்ஜித் ஆகியோர் தலைமை வகித்தார். சிஐடியு  நீலகிரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாபுட்டி துவக்கி வைத்தார்.

மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட வாலி பர் சங்கத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.