திருப்பூர், செப். 16- ஊத்துக்குளி அரசு மருத்துவ மனையில் நோயாளிகளை பார்ப்பதற்கு பல நேரங்களில் மருத் துவர் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இப்பிரச்சனையின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர், முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் ஆர்.குமார் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி அரசு மருத்துவமனையில் புத னன்று காலை 10 மணி ஆகியும், வெளிநோயாளர் பிரிவில் மருத்து வர்கள் இல்லை. இதனால் நோயா ளிகள் அவதிப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று துன்பப்பட்டு வருகிறார்கள். தங்கள் உடனே தலையிட வேண்டுகி றோம்.
இங்கே வெளிநோயாளர் பிரிவு தனியாகவும், சற்று தள்ளி உள்ள கட்டிடத்தில் உள்நோயா ளிகள் பிரிவு தனியாக உள்ளது. ஒரே ஒரு மருத்துவர் பணியில் உள்ளார். இருக்கின்ற மருத்துவரும் உள்நோ யாளிகள் பிரிவில் நின்றுவிட்டால் வெளிநோயாளர் பிரிவில் வருகிற மக்கள் அவதிபட வேண்டி இருக்கின்றது. ஆகவே உள்நோயாளிகள் பிரி வில் ஒரு டாக்டர் தனியாகவும், வெளிநோயாளிகள் பிரிவில் பார்ப்பதற்கு தனியாக போதுமான மருத்துவரும் ஏற்பாடு செய்ய வேண் டுகிறேன். புதனன்று காலை 7 மணிக்கு வருகை தந்த நோயா ளிகளுக்கு 10 மணியாகியும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள். எமர்ஜென்சிக்கு வரும் நோயா ளிகளையும் பார்ப்பதற்கு பல நேரங்களில் மருத்துவர் இல்லை. எனவே இப்பிரச்சனையைக் களைய உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆர்.குமார் கூறியுள்ளார்.