tamilnadu

img

கொரோனா நிவாரணம் வழங்க தூத்துக்குடியில் போராட்டம் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.7500வழங்க வேண்டும்,  அனைத்து அத்தியாவசிய பொருட்களை மூன்று மாதத்திற்கு ரேசன் மூலமாக இலவசமாக வழங்க வேண்டும் , குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தூத்துக்குடி புறநகரில் மாதர் சங்கம் சார்பில்   வீட்டில் இருந்து போராட்டம் நடைபெற்றது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள், காவல்துறை, தூய்மை பணியாளர்கள் , அரசு ஊழியர்கள்,பத்திரிக்கையாளர்கள்  ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நிவாரணமாக ரூ.7,500 வழங்க வேண்டும் என கோரி  இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில்  தூத்துக்குடியில் தன்னார்வ பணி செய்யும் இடத்தின் வாசலில் கோரிக்கை பதாகைகளோடு  மாணவர்கள்  கலந்து கொண்டனர்.