tamilnadu

மணல் குவாரிக்கு அனுமதி கோரி மாட்டு வண்டி தொழிலாளர் போராட்டம்

தொட்டியம், அக்.18- திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணல் குவாரியை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே தொட்டியம் தாலுகா முடக்கு சாலை காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. இங்கு மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கப் பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்த குவாரியில் இருந்து மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கப் படாமல் திடீரென குவாரி செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.  இதனால் மாட்டு வண்டி தொழி லாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், குடும்பத்தையும், மாடுகளையும் வைத்து பராமரிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் முடக்கு சாலை மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில், மாட்டு வண்டிக்கு மணல் வழங்கப்படாததால் தொழிலா ளர்கள் கடும் பாதிப்புக்கு உட்பட்டு உள்ளனர். இரண்டு மாடுகளை வைத்து பராமரிக்க வேண்டும். தீவனம், வைக்கோல் கொடுத்தால் மட்டுமே மாடு கள் ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர எங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும். தொடர்ந்து மாட்டு வண்டிகளுக்கு மணல் தர மறுப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே உடனடியாக மாட்டு வண்டி மணல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் காவல்துறையினர் தொழிலாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அலுவ லர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல் லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் எனத் தெரிவித்தனர். இதைய டுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.