முசிறி, மே 30-திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்ப்பட்டி ஊராட்சி பால சமுத்திரம் மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 40பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும்நாட்களை கணக்கிட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு முழுமையாக ஊதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தொட்டியம் ஒன்றிய கிளை சார்பில் புதனன்று தொட்டியம் பிடிஓஅலுவலகம் முன் முற்றுகை போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் ராமநாதன் தலைமை வகித்தார். போராட்டத்தை மாநில பொதுச்செய லாளர் அமிர்தலிங்கம் தொடங்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி விதொச மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட செயலாளர் பழநிசாமி, மாவட்டதலைவர் சுப்ரமணியன், தவிச மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் பேசினர். விதொச மாவட்ட துணைதலைவர் வீரவிஜயன், ஒன்றிய செயலாளர் முருகன், பாலசமுத்திரம் முருகானந்தம், தனபால், மணிவண்ணன், சந்திரசேகர், நாக ராஜன், பாக்கியராஜ், விஜயகுமார், சுப்பிரமணியன், பஸ்மணி, சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பாலசமுத்திரம் பகுதி மக்களுக்கு பாலசமுத்திரம் பகுதி யிலேயே 100 நாள் வேலை திட்டத்தில்வேலை வழங்குவது. விபத்தில் கா யமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு கூலி வழங்க அரசிற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்டவை முடிவானது. இதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.