தரங்கம்பாடி, அக்.30- நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் கடந்த 2 ஆண்டு களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் வேளாண்மை விரி வாக்க மைய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் எப்போது கட்டப் படும் என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டியே இயங்கி வந்த அலுவலக கட்டிடம் முழுமையாக பழுதடைந் ததால் முற்றிலும் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் வேளாண் துறைக்கு சொந்நமான இடத் திலேயே புதிய கட்டிடத்தை விரைவில் கட்ட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் டி.இராசையன் வலி யுறுத்தியுள்ளார்.