tamilnadu

img

திண்டுக்கல்: ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த சச்சிதானந்தம் எம்.பி

உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். 
உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. உதிரம் உயர்த்துவோம் ரத்ததான குழு சார்பில் நடைபெற்ற இந்த ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். 
மாரத்தனை போட்டை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மெர்சி பவுண்டேஷன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் சிபி சௌந்தர்யன், திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் மீனாட்சி, உதிரம் உயர்த்துவோம் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.