பொன்னமராவதி, ஏப்.30-புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 2018-19 ஆம் கல்வியாண்டில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழித் திறனறித் தேர்வு(சூஆஆளு) நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதில் வார்ப்பட்டு பள்ளியில் எட்டாம் வகுப்பில் 35 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 15 மாணவர்கள் தேசிய வருவாய் வழித் திறனறித் தேர்வுக்குத் தயார்படுத்தப்பட்டனர். அவர்களுள் ப.காயத்திரி மற்றும் ப.தமிழரசி என்ற இரு மாணவிகள் தேசிய வருவாய் வழித் திறனறித் தேர்வில் தேர்வாகி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை மாணவிகளை தலைமையாசிரியர் சொ.தங்கையா, ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப் மக்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த சமூக அறிவியல் ஆசிரியர் ஜோசப் மற்றும் அனைத்து ஆசிரியர்களையும் அனைவரும் பாராட்டினர். 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அதிகளவில் மாணவர்களை வெற்றி பெறச் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
100 சதவீத தேர்ச்சி
மேலும் பொன்னமராவதி பகுதியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்: திருக்களம்பூர்-கருப்புக்குடிப்பட்டி- வார்பட்டு ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக்குலேசன், லயன்ஸ் மெட்ரிக்குலேசன் ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.