tamilnadu

img

குறைதீர் கூட்டத்தில் விதொச, வி.ச, சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, ஆக.19- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அந்தநல்லூர் ஒன்றிய செயலா ளர் சீனிவாசன் டிஆர்ஓ சாந்தியிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்த தாவது: அந்தநல்லூர் ஒன்றியம் கம்ப ரசம்பேட்டை ஊராட்சி விசாலாட்சி நகரில் பிளாட் நம்பர் 8ஏ வீட்டிற்கு எதிரே வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. சுகாதார சீர் கேடு ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இதே போன்று விதொச அந்த நல்லூர் ஒன்றிய செயலாளர் செல்வ மணி டிஆர்ஓ சாந்தியிடம் கொடுத்த மனுவில், அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு ஊராட்சியில் இருந்து குழு மணி ஊராட்சி வழியாக பேரூர் ஊராட்சிக்கு வரும் காவிரி குடிநீர் குழாய் குழுமணி ஊராட்சி பகுதி யில் அடிக்கடி உடைந்து விடுவதால் சாக்கடை நீருடன் கலந்து வரும் காவிரி குடிநீரை தடுத்து பாதுகாப் பான சுத்தமான காவிரி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந் தார். இதே போன்று விதொச பெட்ட வாய்த்தலை ஒன்றிய தலைவர் சுப்ர மணியன் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் வட்டம் சிறுகமணி (கிழக்கு) வருவாய் கிராமத்திற்கு பெருகமணி பள்ளிவாசலில் இருந்து பெட்ட வாய்த்தலை வரை உட்பட்ட பகுதி கள் உள்ளது. சிறுகமணி(கிழக்கு) வருவாய் கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலருக்கு தனி யாக அலுவலகம் கிடையாது. தற்சம யம் பெட்டவாய்த்தலை வருவாய் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து சிறுகமணி (கிழக்கு) கிராமநிர்வாக அலுவலர் பணிபுரிகிறார். இதனால் பொதுமக்கள் பெட்ட வாய்த்தலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிராம நிர்வாக அலு வலரை சந்திக்க பெட்டவாய்த்தலை செல்வதால் கூடுதல் செலவும். நேர மும் வீணாகிறது. இப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார் கள். ஆகவே சிறுகமணி(கிழக்கு) வருவாய் கிராமத்திற்கு சிறுகமணி பகுதியில் கிராம நிர்வாக அலுவல கம் அமைத்து தர வேண்டுகிறேன் என மனுவில் தெரிவித்திருந்தார். இதே போன்று பழனிவேல் கொடுத்த மனுவில், திருச்சி பஞ்சப் பூர் குளத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் பகுதியான குழுமி பகுதியில் மண் எடுக்காமல் தண்ணீர் வெளியேறும் களிங்கி பகுதியில் தோண்டி கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கேட்டால் இது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு என்கின்றனர். எனவே ஆட்சியர் இக் குளத்தை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனுவில் தெரிவித்தி ருந்தார்.    இந்நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜூ, செயலாளர் தங்கதுரை, பொரு ளாளர் இளங்கோவன், துணைத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.  இதேபோன்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்க திருவெறும்பூர் ஒன்றி யச் செயலாளர் குருநாதன் கொடு த்த மனுவில், மேட்டூரில் இருந்து காவிரியில் கடந்த 13.8.19ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேற்படி தண்ணீர் கடந்த 17.8.19ம் தேதி கல்லணையில் இருந்து அனை த்து ஆறுகளிலும் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது. திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உய்யகொண்டான் கட்டளை கால்வாயின் மூலம் நேரடியாகவும், ஏரி, குளங்கள் மூலமாகவும் சாகு படி செய்யப்பட்டு வருகின்றது. எனவே உடனடியாக உய்யகொண் டான் மற்றும் கட்டளை கால்வாயி லும் தண்ணீர் திறந்து விட்டு விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவெறும்பூர் ஒன்றிய செய லாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, வி.ச. ஒன்றிய பொருளாளர் சங்கிலி முத்து, ஒன்றிய கமிட்டி உறுப்பி னர்கள் மலயாளம், சசிகுமார், மணி வாசகம், விதொச ஒன்றிய செயலா ளர் முருகேசன், ஒன்றிய தலைவர் தெய்வநீதி, டிஒய்எப்ஐ ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.