tamilnadu

img

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தமுஎகச நிதியுதவி

திருச்சிராப்பள்ளி, பிப்.14- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை சார்பில் வியாழனன்று திரு வெறும்பூர் கணேசா சிஐடியு அலுவலகத்தில் வெளிச்சம் மாதக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கிளை பொரு ளாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் பட்ஜெட் 2020- எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் என்ற தலைப்பில் பேராசிரியர் ச.அய்யம்பிள்ளை பேசினார். கூட்டத்தில், அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட காரணத்திற் காக திருச்சி மாவட்ட துப்புரவு தொழிலாளர் சங்கத்தை  சார்ந்த 20 பேர் வேலையிலி ருந்து நீக்கப்பட்டார்கள். அவர்களை பாதுகாக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை சார்பில் ரூ.10,000 நிதி கொ டுக்கப்பட்டது. அதை துப்பு ரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன் பெற்றுக் கொண்டார். முன்ன தாக கிளை துணை செயலா ளர் சரவணன் வரவேற்றார். செயலாளர் காளிராஜ் நன்றி கூறினார்.