tamilnadu

img

பணியிட மாற்றத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக,2- பல ஆண்டுகளாக துப்புரவு பணி யாளர்களாக பணிபுரிந்து எந்தவித குற்ற  ச்சாட்டுக்கும் ஆளாகாத சத்திரம் பேருந்து நிலையத்தில் பணிபுரியும் 15 தொழி லாளர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்தும் பணியிடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் சிஐடியு துப்புரவு தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணி மாறன் தலைமையில் துப்புரவு தொழி லாளர்கள் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேல் கலந்து கொண்ட னர். பேச்சுவார்த்தையில், பணியிடமாற்றம் செய்த தொழிலாளர்கள் அந்தந்த பகுதி க்கு சென்று வேலை செய்வது சிறிது நாட்களுக்கு பின் அவர்களுக்கு மீண்டும் சத்திரம் பேருந்து பகுதியிலேயே வேலை வழங்குவது என முடிவானது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.