திருநெல்வேலி, மே 28- பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் துப்புரவு தொழி லாளர்களுடன் வேலை கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தது. நெல்லை மாவட்டத்தில் துப்பு ரவு பணியாளர்கள் 15 ஆண்டுகள் வரை பணி செய்கிறார்கள் இவர்கள் தினக்கூலி தொழிலா ளர்கள் என்ற தான் வேலை செய்கி றார்கள் தினசரி சம்பளமாக ரூ. 359வழங்கப்படுகிறது இவர் களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 634 என இரட்டிப்பு சம்பளமாக வழங்க அரசு உத்தரவிட வேண் டும் போன்ற கோரிக்கையை வலி யுறுத்தி வியாழக்கிழமை சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் தலைமையில் மனு கொடுக்கப் பட்டது இதில் ஏராளமான தொழி லாளர்கள் மனு கொடுக்க வந்தி ருந்தனர் முன்னதாக ஆர்ப்பாட் டம் நடத்திவிட்டு மனு கொடுத்த னர். போராட்டத்தில் சிஐடியு நிர் வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.