தருமபுரி, ஜன. 14- ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார் பில் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வளர்ச்சித்துறை ஊழி யர்கள் மத்தியில் தற்போது நிலவும் அச்ச உணர்வு களை போக்க ஊழியர்களுக்கு காவல்துறை பாது காப்பு வழங்கவேண்டும்.சுதந்திரமான தேர்தல் நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிப்ப வர்கள்,சட்டவிரோதமாக செயல்படுபவர் களை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர் அருளரசை கடுமையாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் பொறியாளர் மணிகண்டன் அவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.விருதுநகர் மாவட்டம் வத்தார யிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சூறை யாடி ஊழியர்களை தாக்கி அலுவலக சொத்துக் களை சூறையாடிய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்.சாத்தூர்,ராஜபாளையம்,நரிக் குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வன்மு றையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர். தருமபுரி ஒன்றிய அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம் தலைமையி லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர் வேலுமணி தலைமையிலும் மொரப்பூரில் மாவட்டசெயலாளர் கோபிநாத் தலைமையிலும், காரிமங்கலத்தில் மாவட்டத் தலைவர் ருத்ரையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பாலக்கோட்டில் மாவட்ட தணிக்கையாளர் சதீஸ்குமார் தலை மையிலும், பாப்பிரெட்டிபட்டியில் சங்கர் தலைமை யிலும்,பென்னாகரத்தில் திம்மராயன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.